07-07-2019 ஆனந்தசந்திரிகை

வணக்கம். இனிய அமெரிக்க சுதந்திர தின வாழ்த்துக்கள்.

ஆனந்தசந்திரிகை
07-07-2019 இதழில்

வள்ளுவன் வாக்கு

இயற்கை வாங்கும் பழி . வீரா

கம்பன் கவிநயம்- மனநிலை -ஸ்ரீ ஸ்ரீதர்

கையறு நிலைஇராமசேஷன்

அலைவன் தொடர்கதைஇராம்கி இராமகிருஷ்ணன்

தாய் – கேயென்னார்

மஜாகிச்சன் பத்மஜா கிருஷ்ணன்

ஈராக் போர்முனையில்ஷாகுல் ஹமீத்

வைத்தியம் – கேயென்னார்

மாயசந்திரிகை

திரை விமர்சனம்கேசரிலோகமாதேவி

லோகசந்திரிகை

மக்களால், மக்களுக்காகஇராம்கி இராமகிருஷ்ணன்

பாலசந்திரிகை

மழலை மழைத்துளிகள்மணிமீ

பச்சை நிறமேநச்சுப்பூங்காலோகமாதேவி

தமிழ்த்தேனீ
– www.ilearntamilnow.com

வண்ணமிடுக
– www.ilearntamilnow.com

கற்ககற்க… –
www.ilearntamilnow.com

எனக்குப் பசிக்குது உனக்கு …

சிரிப்போ சிரிப்பு

 

06-16-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

வணக்கம். இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்.

ஆனந்தசந்திரிகை 06-16-2019 இதழில் …

வள்ளுவன் வாக்கு

கவிதை மழை – ந. வீரா

கம்பன் கவிநயம்-குணத்தின் சிகரம்-ஸ்ரீ ஸ்ரீதர்

கனவும் மெய்ப்படும்… கவிதா அ.கோ

அலைவன் – தொடர்கதை – இராம்கி இராமகிருஷ்ணன்

மஜாகிச்சன் – பத்மஜா கிருஷ்ணன்

ஈராக் போர்முனையில் – ஷாகுல் ஹமீத்

ஒத்தனும் மத்தொருத்தனும் – கிரேஸி மோகன்

மாயசந்திரிகை

திரை விமர்சனம் – Aladdin – லோகமாதேவி

லோகசந்திரிகை

மக்களால், மக்களுக்காக… இராம்கி இராமகிருஷ்ணன்

பாலசந்திரிகை

மழலை மழைத்துளிகள் – மணிமீ

பச்சை நிறமே – மோரிகல்சர் – லோகமாதேவி

இரண்டு பானைகள்- கேயென்னார்

தமிழ்த்தேனீ – www.ilearntamilnow.com

வண்ணமிடுக – www.ilearntamilnow.com

கற்க…கற்க… – www.ilearntamilnow.com

குரங்குக்கு மேலே

சிரிப்போ சிரிப்பு

06-02-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

வணக்கம். இனிய ஞாயிறு தின வாழ்த்துக்கள்.

https://drive.google.com/open?id=1JusDNliwIGMYGMqDCZYd2yOvNreNmF6J

ஆனந்தசந்திரிகை 06-02-2019 இதழில் …

தலையங்கம்

வள்ளுவன் வாக்கு

வாழ்க்கைச் சிக்கல் – கவிதை – ந. வீரா

கம்பன் கவிநயம்-துர்போதனை – ஸ்ரீ ஸ்ரீதர்

தறிநெசவைக் காத்திடுங்க – கவிதா அ.கோ

அலைவன் – தொடர்கதை – இராம்கி இராமகிருஷ்ணன்

மாலைவேளை – கேயென்னார்

மஜாகிச்சன் – பத்மஜா கிருஷ்ணன்

ஈராக் போர்முனையில் – ஷாகுல் ஹமீத்

தலைவன் – கேயென்னார்

மாயசந்திரிகை

திரை விமர்சனம் – Gully Boy – லோகமாதேவி

லோகசந்திரிகை

மக்களால், மக்களுக்காக… – இராம்கி இராமகிருஷ்ணன்

பாலசந்திரிகை

மழலை மழைத்துளிகள் – மணிமீ

பச்சை நிறமே… மக்காச்சோளம் – லோகமாதேவி

தமிழ்த்தேனீ – www.ilearntamilnow.com

வண்ணமிடுக – www.ilearntamilnow.com

கற்க…கற்க… – www.ilearntamilnow.com

வெளியே வந்தா சூடு சிரிப்போ சிரிப்பு

05-19-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

வணக்கம். இனிய ஞாயிறு தின வாழ்த்துக்கள்.

ஆனந்தசந்திரிகை 05-19-2019 இதழில் …

தலையங்கம்: மெமோரியல் தினத்தின் முக்கியத்துவத்தை விளக்குகிறார் ஆசிரியர்.

வாத்தியார் ஐயா: சமுதாயத்தின் விழிகளின் மூலமாகப் பள்ளி ஆசிரியரைப் பார்க்கிறார் கவிஞர் ந. வீரா.

கம்பன் கவிநயம்: ஊடல் பற்றி வள்ளுவனின் தொடங்கி கம்பன் வரை ஆராய்கிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின்.

அலைவன்: நவீன எண்ணுலகில் (Digital Era) ரோபோக்கள் பெருகியுள்ளன. சமைப்பதற்கு ரோபோ, வீட்டைப் பெருக்குவதற்கு ரோபோ, துணி துவைத்துக் காயப் போடுவதற்கு ரோபோ, பலகுரலில் பாட்டுப்பாடும் ரோபோ, நடனம் ஆடும் ரோபோ, படுக்கையைப் பகிர்ந்து கொள்ள ரோபோ என்று பலவிதமான வேலைக்கான ரோபோக்கள் வந்து விட்டன.” என்று நவீன உலகிற்கு எடுத்துச் செல்லுகிறார் கதையினை இராம்கி.

நாளொன்று போதாதே!: அன்னையின் பெருமையைப் பேசிட ஒரு நாள் போதாதே என்று அன்னையர் தினக்கவிதையில் கேயென்னார்.

பயன் தரும் பனை: கவிதை மூலம் பனை மரத்தின் பயன் விளக்குகிறார் கவிதா அ. கோ.

ஈராக் போர்முனையில்: “அவசர அழைப்பிற்குப் பின் பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் இங்கிருந்து புறப்பட்டு அனைவரும் முகாமை காலி செய்தாகவேண்டும். அதற்குள்ளாக அனைவரும் வாகனங்களில், தங்களின் பைகளுடன் அமர்ந்திருக்க வேண்டியது கட்டாயம். அழைப்புமணி எப்போது வேண்டுமென்றாலும் ஒலிக்கலாம். அனைவரும் எப்போதும் தயார்நிலையில் இருங்கள். யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம்! மணியடித்த பத்து நிமிடத்திற்குள் வாகனங்கள் முகாமை விட்டு வெளியேறிவிடும்!” என்று போர்க்கால அணுகுமுறையை விளக்குகிறார் ஆசிரியர் ஷாகுல்.

உதவி: “சுதா அந்த சிறுவனின் நேர்மையை எண்ணி உள்ளம் நெகிழ்ந்து போனார். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம். வீட்டில் ஆட்களும் அதிகம். அவனுக்கே ஆசைப்படும் வயது. ஆனாலும் அந்த ரூபாயை வேறு வகையில் செலவு செய்து விடாமல் திருப்பி அனுப்பிய அந்த உயர்ந்த பண்பை எண்ணி அவரால் வியக்காமல் இருக்க முடியவில்லை” என்று உதவி செய்யும் முன் பாத்திரம் அறிய வேண்டும் என்கிறார் கதாசிரியர்

கேயென்னார்.

திரை விமர்சனம்-To Let: “அவ்வப்போது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டுச் செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.” என்று டு லெட் திரைப்படத்தின் இயக்குநரைச் பாராட்டுகிறார் திருமதி. லோகமாதேவி.

மக்களால், மக்களுக்காக: சென்னை போன்ற நகரங்களில் பல அடுக்கு கட்டடங்களில் வசிப்பவர்கள் பல மாநிலங்களைச் சேர்ந்த பல மொழி பேசுபவர்கள். அவர்கள் கட்டடம் சார்ந்த கூட்டங்களில் அதிகமாக ஆங்கிலத்திலேயே பேசி வருகிறார்கள். இந்தியாவில் பிறந்த இந்தியக் குடிமகன் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் வாழும் உரிமையும் வேலை பார்க்கும் உரிமையும் கொண்டவர்கள் என்பதை நாம் மறக்கலாகாது என்று மனித உரிமையை எடுத்துரைக்கிறார்” ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மழைத்துளிகள்: ஓவியத்தில் வண்ணம், வானவில்லில் வண்ணங்களை வரிசைப் படுத்தி விட்டு, வீட்டு விலங்குகளின் ஒலியால் உள்ளத்தை மகிழ்விக்கிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.

பச்சை நிறமே…: “பல இடங்களில் இணைவரிசையில் எதிரெதிராக நடப்பட்டு வளர்ந்திருக்கும் இம்மரங்களின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று கோர்த்துக்கொண்டு கால்களின் கீழ் இதழ்களாலான ஒரு மென்மையான கம்பளம் விரித்த பூக்கும் நடைபாதையை உருவாக்கியிருக்கும். வசந்த காலத்தில், பசுமை போர்த்திய மலைப் பகுதியில் இலைகளற்ற மரத்தில், சகுரா மலர்கள் பூத்துக் குலுங்குவது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது. இந்த அற்புதமான மலர்களைக் காண உலகின் பிற பகுதிகளிலிருந்தும் ஜப்பானுக்கு லட்சக்கணக்கான மக்கள் ஆர்வத்தோடு வருகை தருகின்றனர்.” என்று நம்மை ஜப்பானுக்கு அழைத்துச் செல்லுகிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

05-05-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

வணக்கம். இனிய ஞாயிறு தின வாழ்த்துக்கள்.

ஆனந்தசந்திரிகை 05-05-2019 இதழில் …

தலையங்கம்: அன்னையர் தினம், உழைப்பாளிகள் தினம் என்று கொண்டாடும் அதே வேளையில் ஈஸ்தர் தினத்தன்று ஈழத்தில் நடந்த பயங்கரவாதத்தை நினைக்காமல் இருக்க முடியவில்லை. இழந்த உயிர்களில் தமிழரும் உண்டு. இழப்பைச் சந்தித்தவர்களுக்கு ஆனந்தசந்திரிகையின் சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கின்றோம் என்று வாழ்த்துக்களையும் வருத்தங்களையும் கலந்து எழுதியுள்ளார் ஆசிரியர்.

தாய்: அன்னையர் தினத்திற்கு கவிதாவின் ஒரு வாழ்த்துக் கவிதை கவிதை.

கம்பன் கவிநயம்: ஆண்டு மலரிலிருந்து தொடங்கிய ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரின் புதிய தொடர் கதையும் சொல்லுகிறது, கம்பனின் கவிதையையும் விளக்குகிறது.

பள்ளி விடுமுறை: விடுமுறை சந்தோஷம்தான் மாணவர்களுக்கு ஆனால் பள்ளிக்கு? நா.வீரா கவிதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். 

அலைவன்: இராம்கி எழுதும் இந்த இதழிலிருந்து தொடங்கும் புதிய தொடர்கதை,தொழில்நுட்பம் நிறைந்த எதிர்கால வாழ்வியலை விளக்கும் நாவல்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்: வாட்ஸ்-அப்பில் வந்த வாழ்த்துக் கவிதையும், கேயென்னாரின் வாழ்த்துக் கவிதையும் வாசகர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துரைக்கின்றன.

ஈராக் போர்முனையில்: “தொடர்ந்து வரும் நாட்களில் நாங்கள் உணவில்லாமல் சிரமப்படப் போகிறோம் என யாருக்கும் தெரியவில்லை. சாலைகளில் தொடர்ந்து பல பாதுகாப்பு மிகுந்த கான்வாய்கள் தாக்கப்பட்டதால், சாலைப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. உணவுக் கூடத்திற்கான உணவுப்பொருட்கள் ஒரு வாரத்திற்கு மேல் வரவில்லை என்றாலே சமாளிப்பது கடினம். அப்போது ஒரு வாரத்திற்கு மேலாகியும் வாகனங்கள் வரவில்லை. போக்குவரத்து எப்போது சீராகும் என யாராலும் கணிக்க இயலவில்லை. காலை, மாலை, இரவில் வழங்கும் உணவு வகைகளின் எண்ணிக்கை முதலில் குறைக்கப்பட்டது.” என்று போர்க்கால உணவு பற்றாக்குறையை விளக்குகிறார் ஆசிரியர் ஷாகுல்.

நண்பன்: ஐ.டி துறையில் பதிவு உயர்வு எப்படிப் பெறுவதென்று கதைமூலம் விளக்குகிறார் ஆசிரியர் கேயென்னார்.

திரை விமர்சனம்-பேரன்பு: “ஒரு சிறப்புப் பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படிக் கஷ்டப்படுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாகத் தீர்க்க வேண்டிய ஒன்றெனக் காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.” என்று பேரன்பு திரைப்படத்தின் இயக்குநரைச் சாடுகிறார் திருமதி. லோகமாதேவி.

மக்களால், மக்களுக்காக: ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளரால் இவ்வளவு மாற்றத்தைக் கொண்டு வர முடியுமானால், இந்தியா முழுவதும் கலவரமில்லாத, லஞ்சம் ஊழல் இல்லாத ஒரு நாடாக மாற வாய்ப்புள்ளது என்பதைக் காட்டுகிறது. அதற்கு ஒவ்வொரு ஆட்சியாளரும் திரு. மீர் முகமது அலி போல் சிந்திக்க வேண்டும். அவரைப் போல் செயல் பட வேண்டும். அவருடைய சீரிய சிந்தனை நாட்டிற்கு மேலும் நன்மைகளைத் தரும் என்று பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மழைத்துளிகள்: கிளி, குருவி, மயில், அணில் என்று குழந்தைகளுக்காக எழுதப் பட்ட கவிதையால், நாம் எல்லோரையும் குழந்தையாக்கிவிடுகிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.

பச்சை நிறமே…: “காற்று மண் மற்றும் நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை கிரகித்துக்கொள்ளும். எனவே விதைகளிலும் தாவர பாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும் தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளைச் சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ, அல்லது ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதை உறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்” என்று டெக்ஸஸின் மாநில மலரைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

04-15-2019 ஆனந்தசந்திரிகை ஆண்டுமலர்

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

இந்நாளில் நமது ஆண்டுமலரின் வாயிலாக பங்கேற்ற ஆசிரியர்கள் அனைவரும் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்களைப் பகிர்கிறார்கள்.  அவர்கள் படைப்புக்கள் அனைத்தையும் படித்து மகிழுங்கள்.

வரும் ஆண்டு உங்களுக்கு வளமாய் அமையட்டும்!!!

03-31-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். வாசகர்கள் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை நல்வாழ்த்துக்கள்.

ஆனந்தசந்திரிகை 03-31-2019 இதழில் …

      தலையங்கம்: இந்தியாவின் சமீபத்திய கொண்டாட்டம், மிஷன் சக்தி. அதே வேளையில் நமது வாசகர்கள் கொண்டாட, ஆனந்தசந்திரிகையின் அடுத்த இதழ் ஆண்டுமலராக வெளிவர உள்ளது என்று மேலும் விவரங்களைப் பகிர்கிறார் தலையங்கத்தில் ஆசிரியர்.

      இயற்கையோடு இயற்பியல்: பள்ளி ஆசிரியர், கவிதையின் ஆசிரியராகும் போது இயற்கையும், இயற்பியலும் இணையத்தானே செய்யும். அழகாய் இணைக்கும் கவிதையில் ந. வீரா.

      வாழும் கலை: ஒரு ஆசிரியரின் பணி பாடம் சொல்லிக் கொடுப்பதோடு முடிந்து விடுவதில்லை. அதையும் தாண்டிப் புனிதமானது என்பதை அழகான கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.

      காத்திருப்பு: எவருக்கும் காத்திருப்பது என்பது மிகவும் கடினமான செயல். ஆனால் வாழ்வில் எத்தனை விதமான காத்திருப்புக்கள் இருக்கின்றன என்று வரிசைப் படுத்துகிறார் ஆசிரியர் கேயென்னார்.

      வியர்வை நோட்டுக்கள்: உழைப்பின் உயர்வைக் காட்டுவது வியர்வை, அவர் தன் அப்பாவின் உழைப்பை உணர்வதைப் படிக்கும்போது கண்ணீர் துளிர்க்க வைக்கும் கவிதாவின் கவிதை.

      ஈராக் போர்முனையில்: ஓடிஸ் ஒரு குட் நியூஸ், ஒரு பேட் நியூஸ்.  முதலில் நான் நல்ல செய்தியைச் சொல்கிறேன். எட்டு மாதங்களுக்குப் பின் என் குழந்தையை நான் பார்த்தேன் சந்தோஷமான நாள் அது. குழந்தையின் பொக்கை வாய் சிரிப்பும், தந்தையை அடையாளம் கண்டு கொண்டு கைகளை உயர்த்தித்  தூக்கச் சொன்னதையும், குழந்தையுடன் குழந்தையாகவே மாறி அவன்  விளையாடி மகிழ்ந்ததையும், குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் சொல்லிச் சிரித்தான். ஆனால் அவன் சொன்ன பேட் நியூஸ் என்ன என்பதைப் படிக்க அழைக்கிறார் ஆசிரியர் ஷாகுல்.

      வலி: பட்டினிப் போரால் துவண்டு, அதன் விளைவாய் கலங்க எத்தனிக்கும் தன் கருவிழிகள் இரண்டைக் கட்டுக்குள் அடக்கி, என் பசி போக்க வரமொன்றைத் தாரும் என்பதைப் போல், தன் கரம்தனைப் பக்கவாட்டுக் கதவெதிரில் அவன் ஏந்தினான் ஆயினும், நின்றிருந்த வண்டியோ நிமிஷத்தில் காணாமற்போனது – என்று ஏழ்மையின் வலியை விளக்குகிறார் ஆசிரியர் கேயென்னார்.

      திரை விமர்சனம்: துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கறுப்பினப் பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பைக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும், ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யப்பட்ட ஷர்லியை காவலர்களிடமிருந்து மீட்பதும் போன்ற காட்சிகளை விவரிக்கும் போது ஒரு சரித்திர மாற்றத்தைக் காட்டுகிறார் திருமதி. லோகமாதேவி.

      மக்களால், மக்களுக்காக: இந்தியாவின் மிஷன் சக்தியை பாராட்டுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

      கடலுக்கு அப்பாலும் கன்னித் தமிழ்: சிங்கப்பூரில் நடக்கும் தமிழ் விழாவினை அங்கிருந்து நமது பத்திரிகைக்கு எழுதி அனுப்பியுள்ளார் திருமதி. செளந்தர நாயகி வயிரவன்.

      மழலை மழைத்துளிகள்: தலையை ஆட்டும் கோழி, வாலை ஆட்டும் நாய்க்குட்டி இவைகளுடன் காலை ஆட்டி உடற்பயிற்சியும் செய்யச் சொல்லுகிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.

      பச்சை நிறமே…: தொட்டாற்சிணுங்கி” செடியை நான் அனைவரும் தொட்டுப் பார்த்து இருக்கிறோம். ஏன் சிணுங்குகிறது எனப் படித்துப் பார்க்க அழைக்கிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

Please join us in our Whats-App group using this link: https://chat.whatsapp.com/KX8xYcqvLTaDn7NTc4J0S3

03-17-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

ஆனந்தசந்திரிகை 03-17-2019 இதழில்

தலையங்கம்: “வசந்ததின் ஆரம்பத்தில், முதலில் புல்வாமாவில் தீவிரவாதிகளின் தாக்குதல், போர் வீரர்கள் மரணம். அதற்கடுத்து எத்தியோபியன் விமான விபத்து, அதையடுத்து பொள்ளாச்சியில் பெண்களை ஏமாற்றிப் பலத்காரம், அதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் மசூதியில் தீவிரவாதிகளின் தாக்குதல் எல்லா இடங்களில் இருந்தும் அவலக் குரலும், அழுகைக் குரலும் கேட்டாகிவிட்டது” என்று வருந்துகிறார் ஆசிரியர்.

உன்னை நம்பித்தானே வந்தேன்:  உன்னை நம்பித்தானே வந்தேன்  என்று அந்த பெண் கதறும் சத்தம் குளவியாய் என் காதுக்குள் இன்னும் குடைந்து கொண்டிருக்கிறது, என்று ஆரம்பித்து பொள்ளாச்சி சம்பவத்தை எண்ணிப் பொறுமுகிறார் கவிஞர் வீரா.

வாழும் கலை: ஆரோக்கியம் என்பது மனது சம்பந்தப்பட்டது. மனதில் கோபம், வேதனை போன்றவை தோன்றும் போது உடல் நலம் கெடுகிறது. இன்னா செய்தாரை மன்னித்தல் அவருக்கு உதவுவதை விட உன் உடல் நலம் காக்கிறது என்று அழகாக ஒரு சிறு கதையின் மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரன்.

நான் என்றால்: என்ற கவிதையில் கவிதா.அ.கோ தன்னைத் தானே ஒரு ஆத்ம பரிசோதனை செய்கிறார். இப் பரிசோதனை அவருக்கு மட்டுமல்ல உங்களையும் கேட்க வைக்கும் “நான் யார்” என்று?

ஈராக் போர்முனையில்: “இரு பெண்கள் உட்பட அமெரிக்க நிறுவனம் சார்பாக பலர்பணியில் இருந்தனர். சன்னி நூறு கிலோ எடையுள்ள நல்ல உயரமான, குண்டான பெண். ஜெசிக்கா ஒல்லியான, குள்ளமான உடல்வாகு கொண்டவள். இருவரும் கறுப்பிகள். இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் இருவருக்கும் குழந்தைகள் உண்டு. ஜெசிக்காவிற்கு, மார்கல், மல்லிக் என இருமகன்கள். திருமணத்தில் விருப்பமில்லை. குழந்தை தேவைப்பட்டது,  பெற்றுக் கொண்டோம் என்றார்கள்” என்ற அமெரிக்கர்கள் கேட்டு வியப்பது நமது கலாச்சாரம் என்கிறார் ஷாகுல்.

திருமணம் டும் டும் டும்: “அவள் வாழ்ந்த ஒரு சொர்க்கத்தை விட்டு மட்டும் அவள் செல்லப் போகிறாள். திருமணம் என்பது ஆண்களின் வாழ்வில் ஒரு நிகழ்வு, ஆனால் ஒவ்வொரு பெண்ணின் வாழ்வில் அது மாற்றம். அவள் வாழ்ந்த வீட்டிலிருந்து அவளை வேரோடு பிடுங்கி எடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வைக்கும் விழாதான் திருமணம்” என்கிறார் இக்கதையில் கேயென்னார்.

பூகம்பம்: இயற்கையே பெரிது என்று நினைவு படுத்தும் கேயென்னரின் கவிதை.

திரைவிமர்சனம்-கோலமாவு கோகிலா: திரைப்படத்தை மட்டுமல்ல நயன்தாராவையும் பாராட்டித் தள்ளிவிட்டார் இப்பட விமர்சனத்தில் ஆசிரியை திருமதி. லோகமாதேவி. அத்தனை பாராட்டுதல்களும் உண்மை.

மக்களால் மக்களுக்காக: ““வீட்டினிலே பெண்களைப் பூட்டி வைத்த விந்தை மனிதர்” என்று ஏளனம் செய்த நாம், இன்று விட்டில் பூச்சிகளாக வெளியே வந்து சுதந்திரமாகத் திரியும் பெண்களை பாதுகாக்கத் தவறி விட்டோம். ஆண்களைப் பலசாலியாகவும், வீரனாகவும், வளர்க்க விரும்பும் நாம் பெண்களை நளினமானவர்களாகவும், ஆண்களைச் சார்ந்தவர்களாகவும் வளர்க்கிறோம். முதலில் ஆணுக்குப் பெண் நிகர் என்று சொல்லும் நாம் அவர்களை நிகரானவர்களாக வளர்க்கத் தவறி விட்டோம்” என்று சாடுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மணித்துளிகள்: சுத்தும் ராட்டினத்தில் ஆரம்பித்து ஐவகை நிலங்களையும் முயல் போல் துள்ளிக் குதித்து வந்து சுற்றிக் காட்டுகிறார் கவிஞர் மணிமீ. எல்லோரும் சேர்ந்து சுற்றலாம்

பச்சை நிறமே…பச்சை நிறமே: குடுவையில் தோட்டமா? எவ்வளவு எளிது என்று விளக்குகிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி. நீங்களும் ஒரு குடுவைத் தோட்டம் தொடங்கலாமே?

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்… தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.

03-03-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே!!!

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

தலையங்கம்: “ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நாம் எப்போதும் சிறப்பு ஆண்டுமலர் வெளியிடுவோம். இவ்வாண்டும் அமோகமாக அச்சில் வெளிவருகிறது. மின்னிதழ் ஏப்ரல் 15ம் தேதி வெளிவரும். அச்சுப்பிரதி அதைத் தொடர்ந்து வெளியிடப்படும். 100+ பக்கங்கள், தமிழ் நாட்டிலிருந்து தமிழறிஞர்கள் பங்கேற்கிறார்கள்” என்ற ஐந்தாம் ஆண்டிற்குள் நுழையும் ஆனந்தசந்திரிகையின் ஆண்டுமலர் அறிவிப்புடன் புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவிக்கிறார் ஆசிரியர்.

வாழும் கலை: “நேரமே இல்லை” என்று சொல்லாதவர்களே இவ்வுலகில் இல்லை. நேரப் பராமரிப்பு (Time management) எல்லா வயதினரும், எல்லா காலத்திலும் கடைப் பிடிக்க வேண்டியது. எப்படி? என்பதை அழகாக ஒரு கதையின்மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதரன்.

விடியுமா? இருளுமா?: என்ற கவிதையில் கவிதா கேட்கும் உழவர்களுக்கான இக்கேள்வி எல்லோரும் விடை காணத் துடிக்கும் ஒரு கேள்வி. கேள்வி மட்டும் நீண்ட காலமாகத் தொக்கி நிற்கிறது. பதில்??

ஈராக் போர்முனையில்: “ராணுவம் பீரங்கியை இயக்கும் கால அட்டவணையை உணவுக் கூடத்தின் அறிவிப்புப் பலகையில் அனைவரும் பார்க்கும் படி தொங்கவிட்டிருந்தனர். பீரங்கி வெடிக்கும்போது பெரும் சப்தம் வரும். எனவே அந்நேரத்தில் அனைவரும் தங்கள் காதுகளைப் பொத்தி பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு அனைவரும் அட்டவணையில் உள்ள குண்டு வெடிக்கும் நேரத்தை நினைவில் வைத்து கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டோம்.” என்று சாப்பாடுக்கானகால அட்டவணையிடுமிடத்தில் குண்டு வெடிப்பதற்கான அட்டவணையிடப் பட்டதை விளக்குகிறார் ஷாகுல்.

மரணப் போராட்டம்: மரங்களின் அவசியத்தை மரங்களில் வாயிலாகவே விளக்கும் சூழ்நிலை மேம்பாட்டுக்கு உதவும் கேயென்னாரின் அவசியம் படிக்க வேண்டிய ஒரு கதை.

ஜீவன்களின் சங்கமம்: உடன் வாழ்பவருடன் சேரமறுக்கும் மனித உலகில் சங்கமத்தின் சிறப்பை விளக்கும் கேயென்னாரின் கவிதை.

திரைவிமர்சனம்-96: ஆகா…ஒஹோ… என்று பாராட்ட ஒரு கூட்டம், அய்யே! என்று முகம் சுளிக்கும் இரண்டாவது கூட்டம் என்ற பிளவு பட்ட விமரிசனத்திற்கு உட்பட்ட “96” திரைப்படத்தை அவர் பாணியில் விமர்சிக்கிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி.

மக்களால் மக்களுக்காக: “தீவிரவாதிகள் நமது நாட்டு பாதுகாப்பு நிறைந்த எல்லைப் பகுதியில் அதுவும், நமது வீரர்கள் மொத்தமாக பயணிக்கும் போது தாக்குதல் நடத்தியுள்ளார்கள். தாக்குதல் நடத்தியவர்களுக்கு அவர்களுடைய உளவாளிகள் மூலம் நமது நாட்டின் எல்லைப் பகுதி போர் வீரர்களின் இயக்கம் தெரிந்திருக்கிறது. அவர்களின் உளவுப்படை நமது நாட்டின் உளவுத்துறையை விட நன்றாகச் செயல் பட்டுள்ளது. அவர்கள் செய்தி திரட்டுவதில் நமது நாட்டுச் செயற்கைக் கோளையையும் மிஞ்சியுள்ளார்கள். இது இன்றும் எட்டப்பர்கள் ஏராளமாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று புல்வாமா தாக்குதலை அலசுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.

மழலை மணித்துளிகள்: குழந்தைகளுக்கான கவிதைகள் எழுதும் போது குழந்தையாகவே மாறி விடுகிறார் நமது கவிஞர் மணிமீ. இளமைத் தமிழ், பாப்பா கச்சேரி, பூனையும் எலியும் பற்றிய அனைத்துக் கவிதைகளும் அருமை.

பச்சை நிறமே…பச்சை நிறமே: குறிஞ்சி மலர் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் பூக்கும். அதன் காலக்கணக்கு எப்படி நிகழ்கிறது என்று விளக்குகிறார் ஆசிரியை திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.
படிக்கத் தவறாதீர்கள்… தொடர்ந்து படிக்கத் தவறாதீர்கள்.

02-15-2019 ஆனந்தசந்திரிகை

அன்பு வாசகர்களே !!!

வணக்கம். உலகமெல்லாம் பரவி வாழும் தமிழர்கள் அனைவருக்கும் “காதலர் தின வாழ்த்துக்கள்”. ஆனந்தசந்திரிகை 02-15-2019 இதழில் …

 • தலையங்கம்: அடுத்த இதழிலில் இருந்து ஆனந்தசந்திரிகை வெளியிடும் தேதியில் ஒரு சிறு மாற்றம் செய்ய இருக்கிறோம். அதாவது மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமையன்றும், மூன்றாம் ஞாயிற்றுக் கிழமையன்றும் வெளியிட்டால் படிப்பவர்களுக்கு வார விடுமுறையில் படிக்க வசதியாக இருக்கும். எனவே அடுத்த இதழ் பிப்ரவரி 28-ம் தேதி வெளிவருவதற்குப் பதிலாக மார்ச்சு மாதம் 3-ம் தேதி வெளிவரும்.
 • உன் நலமன்றோ: கவிஞர்களுக்கு காதல் கவிதை எழுவது மிகப் பிடித்தமான செயல். இராம்கியும் அதற்கு விதிவிலக்கல்ல.
 • வாழும் கலை: நாம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நாம் சந்திக்கும் பலர் நம்முடைய கருத்துடன் ஒத்துப்போவதில்லை. கருத்து வேறுபாடுகளைக் கையாளுவது எப்படி? என்பதைக் கதை மூலம் விளக்குகிறார் ஆசிரியர் ஸ்ரீ ஸ்ரீதர்.
 • வள்ளலார் குஞ்சு: மூலைக்கும், இதயத்திற்கும் ஏற்படும் முரண், அறிவிற்கும் உணர்விற்கும் ஏற்படும் முரண். முடிவில் இதயமே வெல்லும் என்பதைக் கவிதை பாடி உரைக்கிறார் நா.வீரா.
 • தூக்குத்தூக்கி: வாழ்வின் பாரம்தனை வார்த்தையால் விளக்குவது கவிஞருக்கே சாத்தியம். கவிதாவின் கவிதை கலங்க வைக்கும் உண்மை.
 • ஈராக் போர்முனையில்: “எதிர்பாராமல் முகத்தில் பலத்த அடி விழுந்ததில் நிலை தடுமாறிக் கீழே விழுந்த ஜோக்கிம், வாயிலும், மூக்கிலும் ரத்தம் சொட்டச்சொட்ட அடுமனையை நோக்கி ஓடி வந்தான். அவன் எதுவும் பேசவில்லை. சைகையால் கையசைத்தான். தூரத்தில் வைன் நின்று கொண்டிருந்தான். ஜோக்கிமிடம் யாரும் எதையும் கேட்கவில்லை. வைனின் அட்டுழியங்கள் அனைவரும் அறிந்ததே. அடுமனையிலிருந்தும், வெளியிலிருந்தும் வேலை செய்துகொண்டிருந்த பெருங்கூட்டம் ஒன்று வேகமாக ஓடியது வைனை நோக்கி” என்று உச்சக்கட்டத்தில் கதையை நிறுத்தியுள்ளார் ஆசிரியர் ஷாகுல்.
 • கொத்தடிமை: அடைக்கலத்துக்கு அவன் அடிமையாயிருப்பதும் புரிந்ததில்லை; சுதந்திரமாயிருக்க வேண்டும் என்பதும் தோன்றியதில்லை. சொல்லப் போனால் சுதந்திரமாயிருப்பது என்றால் என்னவென்றே அவனுக்கும் அவனைச் சேர்ந்தவர்களுக்கும் தெரியாது. அதை எல்லாம் தெரிந்து கொள்கிற அளவுக்கு அகர்வால் அவர்களை அனுமதித்ததே இல்லை” என்று சமுதாய அவலத்தைப் பறை சாற்றுகிறார் ஆசிரியர் கேயென்னார்.
 • காற்று விடு தூது: கேயென்னாரின் காதலர் தினக் கவிதை காற்றிடம் தூது விடும் அழகு.
 • திரை விமர்சனம்: “காதலி பயணிக்கும் பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத்தின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும் பிரமாதம், ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளைத் தெருவிலிருந்தபடி பார்த்து ஃபகத் புன்னகைக்கும் காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.” என்று நடிப்பு மொழிக்கு அப்பாற்பட்டது என்று முழங்குகிறார் திருமதி. லோகமாதேவி.
 • மக்களால், மக்களுக்காக: வலது கை புழுதி பெரிசா? இடதுகை மண்ணாங்கட்டி பெரிசா என்ற நிலையில் உள்ளது இந்தியாவின் அரசியல் என்று ஆதங்கப்படுகிறார் ஆசிரியர் இராம்கி இராமகிருஷ்ணன்.
 • மழலை மழைத்துளிகள்: குழந்தைகளுக்காக எழுதப் பட்டாலும் ஆசை எண்ணம் முயற்சி வெற்றி அனவருக்குமான கவிதை என்கிறார் மழலைக் கவிதைகளின் மணிமீ.
 • பச்சை நிறமே…: “பூக்களே காய் போல சதைப்பற்றுடன் இருப்பதால் அத்தி பூப்பதில்லை நேரடியாக காய்த்து விடுகின்றது என்னும் நம்பிகையின் பேரில் “அத்தி பூத்தாற்போன்று” எனும் ஒரு பழஞ்சொல்கூட வழக்கத்தில் இருக்கின்றது.” என்ற பழமொழிக்கு அறிவியல் விளக்கம் அளிக்கிறார் திருமதி. லோகமாதேவி.

குழந்தைகளுக்கான தமிழ்த்தேனீ, கற்க கற்க, வண்ணமிடுக, சிரிப்போ சிரிப்பு மற்றும் பெற்றோர்களுக்கான மகாபாரதமும், மகளிர்களுக்கான மஜா கிச்சனும்.

படிக்கத் தவறாதீர்கள்…குறிப்பாக செயலியில் (Mobile App) படிக்கத் தவறாதீர்கள்.

Search and install the “Anandachandrikai” App at your App store/Google Play.